சால்னாவின் சுவைக்காகவே பரோட்டாவை விரும்புபவர்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றனர். இது போன்ற சால்னாவை கடையில் மட்டுமே செய்ய முடியும் என்று பலர் நினைக்கக் கூடும். ஆனால், வீட்டிலேயே செம்ம டேஸ்டான சால்னா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
பிரியாணி இலை,
கிராம்பு,
அன்னாசிப் பூ,
ஏலக்காய்,
வெங்காயம்,
மிளகாய்,
இஞ்சி - பூண்டு விழுது,
புதினா இலை,
தக்காளி,
மிளகாய் தூள்,
மஞ்சள் தூள்,
மிளகு தூள்,
தேங்காய்,
முந்திரி,
கசகசா,
சோம்பு,
உப்பு மற்றும்
தண்ணீர்.
செய்முறை:
அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இதில், பிரியாணி இலை, கிராம்பு, அன்னாசிப் பூ, ஏலக்காய் சேறுத்து நன்கு வறுக்கவும். இதில் இருந்து வாசனை வந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்கலாம்.
இதற்கடுத்து, ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து கலக்கவும். இதன் பின்னர், புதினா இலைகள், நறுக்கிய தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதனிடையே, தேங்காய், முந்திரி, கசகசா மற்றும் சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பசை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் இருக்கும் மசாலாவுடன் சேர்த்து கலக்கலாம். இனி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, இரண்டு விசில் விட்டு எடுத்தால் ருசியான சால்னா ரெடி. இது பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட சூப்பர் டேஸ்டாக இருக்கும்.