யம்மி, டேஸ்டி சேமியா கேசரி: 10 நிமிடத்தில் செய்து அசத்தலாம்!

சேமியா கேசரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

சேமியா கேசரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
semiya kesari

semiya kesari

சேமியா வைத்து பாயசம் செய்திருப்போம். இங்கு சேமியா கொண்டு மற்றொரு ஸ்வீட், தித்திப்பான கேசரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சேமியா – 1 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – கால் கப்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு – 10
திராட்சை – 10
ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய், நெய் சேர்த்து இரண்டையும் காய வைத்து, முந்திரி, திராட்சை சேர்த்து1 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள். பின்னர் சேமியாவை தனியாக 1 நிமிடம் வறுக்கவும். இப்போது அடுப்பை மெதுவாக வைத்து அரைகப் நீர் சேர்க்கவும். அடுத்து ஆரஞ்சு கேசரி பவுடர் சேர்க்கவும். 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். மூடியை திறந்து சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கெட்டியாகும் வரை கிளறவும். கடைசியாக ஏலக்காய் தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான சேமியா கேசரி ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: