ஸ்வீட் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளைப் ப்ரியம். ஆனால் எல்லாராலும் தினமும் கடைகளில் ஸ்வீட் வாங்கிக் கொடுப்பது கடினம். உங்களுக்காகவே இந்த அருமையான எளிமையான ஸ்வீட் ரெசிபி.
Advertisment
இந்த ஸ்வீட் செய்ய நீங்கள் அடுப்பு பக்கமே போக வேண்டியது இல்லை. மேலும் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே 15 நிமிடத்திற்குள் செய்யலாம். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இந்த டேஸ்டி ஸ்வீட் ரெசிபியை சூர்யா கிச்சன் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – 1 கப்
பாதாம் அல்லது முந்திரி பருப்பு – 7 (தேவைப்படின்)
சர்க்கரை – ¾ கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
பால் பவுடர் – ¼ கப் (தேவைப்படின்)
ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
நெய் – 1 டீஸ்பூன்
பால் – ¼ கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, பாதாம் அல்லது முந்திரி மற்றும் சர்க்கரையை தண்ணீர் சேர்க்காமல் பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த மாவை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.
சலித்த மாவில் தேங்காய் துருவல், பால் பவுடர், ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள், நெய் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் நன்றாக காய்ச்சி ஆறவைக்கப்பட்ட பாலை சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவை அப்படியே லட்டு போல் உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தட்டில் நெய் தடவி மாவை சமமாக பரப்பிய பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வளவு தான் சூப்பரான ஈஸியான டேஸ்டியான ஸ்வீட் ரெடி. உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“