சிலருக்கு இயல்பாகவே காரசாரமான உணவுகள் மிகவும் பிடிக்கும். அப்படி காரமான உணவுகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் கார சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இது டிஃபன் வகைகளுக்கு சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி,
வரமிளகாய்,
காஷ்மீர் மிளகாய்,
புளி,
உப்பு,
நல்லெண்ணெய்,
கடுகு,
கடலை பருப்பு மற்றும்
கறிவேப்பிலை.
செய்முறை:
ஒரு தக்காளி, 6 வரமிளகாய், 4 காஷ்மீர் மிளகாய், சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது சட்னிக்கான மசாலா நம்மிடம் தயாராக இருக்கிறது.
இனி தாளிப்பதற்கு தேவையான குறிப்பிகளை பார்க்கலாம். அடுப்பில் கடாய் வைத்து அதில் தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் கடுகு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
இவ்வாறு தாளித்து வைத்த பொருட்களை அதன் எண்ணெயுடன் மசாலாவில் சேர்த்தால் காரசாரமான சட்னி ரெடியாகி விடும். இதனை, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.