பெரும்பாலும் ஸ்கூல் முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சோர்வாக காணப்படுவார்கள். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஒரு சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
சோளம்,
வெங்காயம்,
பச்சை குடை மிளகாய்,
பூண்டு,
பச்சை மிளகாய்,
சில்லி ஃப்ளேக்ஸ்,
மிளகுத் தூள்,
உப்பு,
இத்தாலியன் சீசனிங்,
சீஸ்,
கொத்தமல்லி,
வெண்ணெய் மற்றும்
பிரட்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோளம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை குடை மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத் தூள், உப்பு, இத்தாலியன் சீசனிங், சீஸ் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் லேசாக வெண்ணெய் விட வேண்டும். இதன் பின்னர், பிரட்டிலும் லேசாக வெண்ணெய்யை தடவிக் கொள்ளலாம். இந்த பிரட்டை கடாயில் வைத்து, அதன் மீது கலந்து வைத்திருக்கும் மசாலாவை வைக்க வேண்டும்.
இதையடுத்து, பிரட் மீது இருக்கும் மசாலா கலவையில் சீஸ் தூவ வேண்டும். இதற்கடுத்து, கடாயில் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைத்து, கடாயை மூடி விடலாம். இந்த தண்ணீர் கொதித்து சீஸ் உருகிய பின்னர், பிரட்டை எடுத்து சூடாக பரிமாறலாம்.
இப்படி செய்தால், சீஸியான ஸ்வீட் கார்ன் டோஸ்ட் தயாராகி விடும். இதனை ஸ்நாக்ஸாக கொடுக்கும் போது குழந்தைகளுக்கு மிகுந்த விருப்பமாக இருக்கும்.