சுடும் போதே காலியாகும் அடை... இந்த மாதிரி செஞ்சு குடுங்க; இன்னும் இருக்கான்னு கேட்பாங்க!

சுடும்போதே காலியாகும் அவ்வளவு சுவை மற்றும் வாசனை கொண்ட அடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சுடும்போதே காலியாகும் அவ்வளவு சுவை மற்றும் வாசனை கொண்ட அடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
அடை அடை

வீட்டில் எப்போதும் சுவை மிகுந்த உணவை எதிர்பார்க்கும் உங்கள் பிள்ளைகளுக்காக, இந்த மொறுமொறு அடையை செய்து கொடுங்கள். சுவையான மொறு மொறு அடை எப்படி செய்வது என்று கொங்கு நாட்டு சுவை வித் ஹோம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.  

Advertisment

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி அல்லது சாப்பாட்டு அரிசி 
துவரம் பருப்பு 
சீரகம் 
வரமிளகாய் 
கறிவேப்பிலை 
தேங்காய் 
சின்ன வெங்காயம்
உப்பு 
பெருங்காயம் 
எண்ணெய் 

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில், அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி, குறைந்தது 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், வரமிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியே வைக்கவும்.

அதே மிக்ஸி ஜாரில் தேங்காயையும், சின்ன வெங்காயத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஊறிய அரிசி மற்றும் பருப்பை மிக்ஸி அல்லது கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கத் தொடங்கவும்.

அரைத்து வைத்துள்ள சீரகம்-கறிவேப்பிலை கலவையை மாவுடன் சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். கடைசியாக, அரைத்த தேங்காய்-சின்ன வெங்காயம் கலவையை மாவுடன் சேர்த்து, அடை மாவு பதத்திற்கு, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல், கெட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடான கல்லில், ஈரத் துணியைப் பயன்படுத்தி மாவை மெல்லிய அடையாகத் தட்டவும். ஈரத் துணியில் மாவை தட்டினால் எளிதாக வரும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகும் வரை சுட்டு எடுக்கவும்.

சுடச்சுட அடையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Cooking Tips Healthy light weight snacks to eat in this season

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: