நீங்கள் சுமார் 30 நிமிடங்களில் செய்யக் கூடிய இந்த தக்காளி ஊறுகாய், ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி, ஒரு சூப்பரான ஊறுகாயை எப்படி செய்வது என்று இதில் பார்ப்போம். இது பேச்சுலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி,
புளி,
எண்ணெய்,
கடுகு,
வெந்தயம்,
பூண்டு,
காஷ்மீர் மிளகாய் தூள்,
உப்பு மற்றும்
பெருங்காயத்தூள்.
செய்முறை:
முதலில் தக்காளியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், வெட்டி வைத்த தக்காளியுடன் சிறிது புளி சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
இதனிடையே அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில் கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய பூண்டு, காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்த தக்காளி கலவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இத்துடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
இதன் பின்னர், எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்தால் சுவையான தக்காளி ஊறுகாய் தயாராகி விடும். இதனை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். சுவையும் அட்டகாசமாக இருக்கும்.