சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி; தக்காளி புலாவ் டக்குனு செய்து அசத்துங்க

தக்காளி புலாவ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தக்காளி புலாவ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Tomato pul.jpg

சுவையான தக்காளி புலாவ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையானவை 

பாசுமதி அரிசி – 2 கப் 
வெங்காயம் – 1 
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 3 
குடைமிளகாய் – 1 
பன்னீர் – 1/2 கப் 
பச்சை பட்டாணி – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2 
தக்காளி கெட்சப் – 1/4 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை 

Advertisment
Advertisements

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.பிறகு அதில் தக்காளி கெட்சப் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, பின் குடை மிளகாய், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். 

பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். கடைசியாக அதில் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டி, பின் கொத்த மல்லியைத் தூவினால் கம கம தக்காளி புலாவ் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: