நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உணவு பொருட்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதன்படி, துவரம் பருப்பில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக, டிரப்டோஃபேன், லைசின், மிதியோனைன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் துவரம்பருப்பில் இருக்கின்றன.
துவரம்பருப்பில் உள்ள நார்ச்சத்து மலத்தை இளக்குவதுடன், ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதுடன், சிறுநீரகப் பாதை தொற்றுகளை அழிக்கும் ஆற்றல் துவரம் பருப்பில் உள்ளது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பிய துவரம் பருப்பை கொண்டு சுவையான கபாப் ரெசிபியை காண்போம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு,
வெங்காயம்,
பூண்டு,
பச்சை மிளகாய்,
உப்பு,
மிளகுத்தூள்,
மிளகாய்த் தூள்,
சீரகம்,
கொத்தமல்லி,
எண்ணெய்.
செய்முறை:
துவரம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பின்னர், இதன் நீரை வடிகட்டி விடலாம். இதன் பின்பு துவரம் பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள் மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்தக் கலவையுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை கலந்து மிக்ஸியில் அரைக்கலாம். இதையடுத்து, இந்த மாவை உள்ளங்கையில் தட்டி வடை வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும். இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றலாம்.
இந்த எண்ணெய்யில் பருப்பு மாவை பொந்நிறமாக பொறித்து எடுத்தால் சுவையான துவரம் பருப்பு கபாப் தயாராகி விடும். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.