டேஸ்டியான வரமிளகாய் நெய் சாதம் எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று செஃப் தீனா தெரிவித்துள்ளார். இந்த ரெசிபி ஜெயா டி.வி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்கான செய்முறையை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவையும் எல்லோரும் விரும்பும் வகையில் அமைந்திருக்கும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
நெய்,
வரமிளகாய்,
கடுகு,
சோம்பு,
கறிவேப்பிலை,
தக்காளி,
உப்பு,
மஞ்சள் தூள்,
சிக்கன் மசாலா பொடி,
சாதம் மற்றும்
கொத்தமல்லி.
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இந்த எண்ணெய் சூடாகும் போது, சிறிது நெய் சேர்த்து உருக்க வேண்டும். இனி, நெய் உருகும் நேரத்தில் வரமிளகாயை சேர்த்து கிளற வேண்டும்.
இதையடுத்து, கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள், சிக்கன் மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதற்கடுத்து, தேவையான அளவு சாதம், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
இவ்வாறு நன்கு கலக்கி எடுத்தால் சுவையான வரமிளகாய் நெய் சாதம் தயாராகி விடும். இதற்கு வெங்காய பச்சடி சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். புதுமையான ஒரு ரெசிபியை சாப்பிட நினைப்பவர்கள், இதனை ட்ரை பண்ணலாம்.