பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை ஆகிய டிஃபன் வகைகளுக்கு சட்னி தான் சைட்டிஷ் ஆக இருக்கும். அதற்கு மாற்றாக ஒரு டேஸ்டான குழம்பு எப்படி எளிதாக செய்யலாம் என்று பார்ப்போம். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
தேவையனா பொருட்கள்:
பொட்டுக் கடலை,
தேங்காய்,
சோம்பு,
கிராம்பு,
கசகசா,
பட்டை,
குழம்பு மசாலா,
மஞ்சள் தூள்,
எண்ணெய்,
கடுகு,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை,
வெங்காயம்,
உப்பு மற்றும்
கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
முதலில், பொட்டுக் கடலை, தேங்காய், சோம்பு, கிராம்பு, கசகசா மற்றும் பட்டை ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பொட்டுக் கடலை அதிகமாகவும், தேங்காய் குறைவாகவும் இருப்பது அவசியம். அதன் பின்னர், சிறிது தண்ணீர், நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலக்கலாம்.
இதன் பின்னர், குழம்பு மசாலா, தேவையான அளவு உப்பு, தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக, ஆறு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சூடான குழம்பு ரெடியாகி விடும். இது இட்லி மற்றும் தோசை போன்ற டிஃபன் வகைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.