Advertisment

டேஸ்டியான கோதுமை அப்பம் இப்படி செய்யுங்க.. ரெசிபி இதோ!

கோதுமை அப்பம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டேஸ்டியான கோதுமை அப்பம் இப்படி செய்யுங்க.. ரெசிபி இதோ!

கோதுமை ஆரோக்கியம் நிறைந்தது. கோதுமையில் பல வகையான உணவுகள் செய்யலாம். பல ரெசிபிகளில் மைதாவிற்கு மாற்றாக கோதுமை சேர்த்து செய்யலாம். கோதுமை உணவுகள் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக உள்ளது. சுகர் உள்ளவர்கள் கோதுமை உணவுகள் எடுத்துக் கொள்வர். கோதுமையில் இனிப்பு, கார வகைகள் செய்யலாம். இங்கு இனிப்பான கோதுமை அப்பம் எப்படி செய்வது என்பது இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வெல்லம் - 1/2 கப்

கோதுமை மாவு - 1 1/2 கப் 

ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை 

சீரகம் - 1/4 ஸ்பூன் 

பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன் 

தண்ணீர் - 2 கப் 

நெய் - தேவையான அளவு 

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின் அதில்

கோதுமை மாவு, சீரகம், பேக்கிங் சோடா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலக்கவும்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்தால் கட்டி வராது. இப்போது மாவு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் தோசைக்கல் வைத்து, கலவையை ஊற்றவும். நெய் சுற்றி ஊற்றவும்.

மாவின் அடித்தளம் சாஃப்டாகவும், பொன்னிறமாக மாறும் போது அப்பத்தை திருப்பி போடவும். 1 நிமிடம் வேக வைக்கவும். அவ்வளவு தான் இனிப்பான கோதுமை அப்பம் ரெடி. இதை பணியாரம் கல்லில் ஊற்றியும் செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment