இந்த உலகில் அசைவ உணவுகளுக்கு பலரும் அடிமை. ஹோட்டலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, ஏதாவது விடுமுறை என்றால் உடனே கோழி இறைச்சி வாங்கி, சிக்கன் பொரியல், சிக்கன் குழம்பு, பிரைடு சிக்கன் இப்படி ஏதாவது சமைத்து சாப்பிட்டால் தான் அந்த நாள் முழுமையடையும்.
இந்த வார விடுமுறையில் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சுவைக்க சுவையான தவா சிக்கன் ரெசிபி இங்கே..
தேவையான பொருட்கள்
கோழிக் கறி – அரை கிலோ
வெங்காயம் – 1
இஞ்சி-பூண்டு – 1டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள், சீரகத் தூள் – தலா 1டீஸ்பூன்
தயிர் – 1 கரண்டி
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
சுத்தம் செய்த கோழிக்கறியில் வெங்காயம், தயிர், நசுக்கிய இஞ்சி-பூண்டு, மிளகாய்த் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதை குக்கரில் ஐந்து விசில்வரை வேகவிட்டு எடுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு ஏற்கெனவே வேகவைத்த கறியை சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும் மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்து, இருபுறமும் திருப்பிவிட்டு முறுகலானதும் மல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“