இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அதில் மருந்து என்பது ஒரு வழி, மற்றவை நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்தியம்.
உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு ஆபத்தான நிலை. தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தம்’ ஆபத்தான நிலைக்கு உயரும் நிலை இது. இது காலப்போக்கில் இதயத்தை சேதப்படுத்தும் மற்றும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஒருமுறை கண்டறியப்பட்டால், நிலைமையை சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடக்கூடாது, இல்லையெனில் அது ஆபத்தானதாக மாறும். அதிர்ஷ்டவசமாக, இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அதில் மருந்து என்பது ஒரு வழி, மற்றவை நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்தியம். அந்த வகையில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ஒரு டீ குடித்தால் போதும் என்று டாக்டர் சகுல் கூறுகிறார்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,
தண்ணீர் 1 கப் – 150 மி.லி,
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்
செய்முறை :
பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு 5 நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது. காலையில் டீ, காபிக்கு பதிலாக இந்த டீயை எடுத்து கொள்ளலாம்.
பிபி நார்மலாக உள்ளவர்கள் இந்த குடி குடிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம். பிபி உள்ளவர்கள் தொடர்ந்து ஒன்றரை மாதமாவது குடித்து வர வேண்டியது அவசியம்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும் டீ | Drink a cup daily to reduce blood pressure
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.