டீ கடை ஸ்டைலில் பிரட் வைத்து பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போம். விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக இதை செய்து கொடுங்கள்.
டீ கடை ஸ்டைலில் பிரட் வைத்து பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போம். விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக இதை செய்து கொடுங்கள்.
கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அந்த லிஸ்டில் ஒன்றாக இருக்கும் டீக்கடை ஸ்டைல் பஜ்ஜி எப்படி செய்வது என்றும் தெரிந்து கொள்ளலாம். டீக்கடை என்றாலே பஜ்ஜிதான். ஆனால் ஒவ்வொரு முறையும் டீக்கடை சென்று பஜ்ஜி சாப்பிட முடியாது. அப்படி இருப்பவர்கள் அந்த டீக்கடை பஜியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம். பிரட் வைத்து டீக்கடை ஸ்டைலில் சூடான ஒரு பஜ்ஜி செய்வது பற்றி டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பதை பார்ப்போம்.
சம்மர் ஹாலிடேசில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த பஜ்ஜியை செய்து கொடுக்கலாம் ஒரு நல்ல ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆகவும் இருக்கும்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
பிரட் மைதா ஜாம் கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் சோடா உப்பு எண்ணெய்
செய்முறை
ஒரு பவுலில் மைதா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். பின்னர் கடையில் வாங்கிய பிரட் எடுத்து அதன் ஓரங்களில் கருப்பு நிறங்களில் இருப்பதை நறுக்கி வைத்த அந்த வெள்ளை பிரட்டை மட்டும் சப்பாத்தி கட்டையை வைத்து உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதன் ஓரங்களில் மைதாபேஸ்டை தடவி நடுவில் ஏதாவது ஒரு ஜாமை தடவி கொள்ளவும். பின்னர் இவற்றை உருட்டி வைக்கவும். இப்படியாக பிராட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து விஸ்க் வைத்து கலந்து விடவும். எண்ணெயும் சேர்த்து கலந்தால் மாவு கெட்டியாகி விடும். பின்னர் அதில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்தால் மாவு பஜ்ஜி போடுவதற்கு தகுந்தார் போல தயாராகிவிடும்.
பின்னர் அந்த மாவில் திரட்டி வைத்துள்ள பிரட்டை போட்டு திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் உள்ளே சுவையாகவும் வெளியே பஜ்ஜி போன்றும் பிரட் பஜ்ஜி ரெடி ஆகிவிடும்.