டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் டீக்கடை ஸ்டைலில் சுட சுட பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதனுள் வைக்கப்படும் மசாலா மற்றும் ஸ்டஃப்பிங் மிகவும் சுவையாக இருக்கும். இதை நீங்கள் ஒருமுறை வீட்டில் செய்து கொடுத்தால், அடிக்கடி செய்யச் சொல்லி கேட்பார்கள்.
Advertisment
தேவையான பொருட்கள்
கடலை மாவு உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய்: 2-3 இஞ்சி பூண்டு புதினா இலை மல்லித்தழை புளி/எலுமிச்சை சாறு தயிர் பன் சோம்பு சீரகம் தூள் உப்பு/இந்து உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் தனி மிளகாய் தூள் ஓமம் சோடா உப்பு கடலை எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பேனை அடுப்பில் வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்யை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
பொரிந்ததும், பொடியாக நறுக்கிய 2 மீடியம் சைஸ் வெங்காயம், 2 பச்சை மிளகாய், மற்றும் சிறு துண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி அளவு வதங்கினால் போதும், முழுமையாக வதங்க வேண்டாம்.
அரை டீஸ்பூன் தூள் உப்பு, 2 சிட்டிகை பெருங்காயத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் அரை டீஸ்பூன் தனி மிளகாய் தூள் சேர்த்து மிதமான சூட்டில் ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும். நன்கு வதங்கியதும், பொடியாக நறுக்கிய கொஞ்சம் மல்லித்தழை மற்றும் புதினா இலை சேர்த்து லேசாக பிரட்டி, அடுப்பை அணைக்கவும்.
400 கிராம் வேகவைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கை ஒரு பவுலில் எடுத்து, ஒன்னு ரெண்டுமாக நசுக்கவும் (ரொம்பவும் கூழாக்க வேண்டாம்). தயாரித்து வைத்த வெங்காய மசாலாவை நசுக்கிய உருளைக்கிழங்குடன் சேர்த்து, உருளைக்கிழங்கில் மசாலா படுமாறு நன்கு கலந்து விடவும். இப்போது உருளைக்கிழங்கு மசாலா தயார்.
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில், ஒரு கைப்பிடி புதினா இலை, பாதி அளவு மல்லித்தழை, மூன்று பச்சை மிளகாய், சிறு துண்டு இஞ்சி, ஒரு பெரிய பூண்டு பல், மற்றும் சிறு துண்டு புளி (அல்லது சிறிது எலுமிச்சை சாறு) சேர்க்கவும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் புளிக்காத தயிர் சேர்த்து, எல்லாவற்றையும் நன்கு அரைத்து பைன் பேஸ்ட்டாக எடுக்கவும். பவுலுக்கு மாற்றும்போது, லேசாக ஒரு அரை உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு பவுலில் 300-350 கிராம் (2 கப்) கடலை மாவு எடுக்கவும். கடலை மாவுடன், கால் டீஸ்பூன் ஓமம் (நசுக்கி சேர்க்கவும்), அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை டீஸ்பூன் காஷ்மீர் சில்லி பவுடர், அரை டீஸ்பூன் சோடா உப்பு, மற்றும் கால் டீஸ்பூன் உப்பு (இந்து உப்பு பயன்படுத்தப்பட்டது) சேர்த்து நன்கு கலந்து விடவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் (சுமார் 300 மிலி) சேர்த்து, கட்டி இல்லாமல் நைசான பேஸ்ட் போல கரைக்கவும். மாவு கெட்டியாக இல்லாமல், கிரீம் போல வழவழப்பாக இருக்க வேண்டும்.ஆறு பன்களை எடுத்துக்கொள்ளவும் (சதுர அல்லது வட்ட பன்கள்).
ஒரு பன்னை எடுத்து, பாதியளவு மேலிருந்து கத்தியால் சென்டராக வெட்டவும், ஆனால் முழுமையாக பிரிக்க வேண்டாம். வெட்டிய பன்னின் கீழ் பகுதியில், தயாரித்து வைத்த பச்சை சாஸை ஒரு குட்டி ஸ்பூன் கொண்டு லேசாக தடவவும். அவ்வளவு தான் சூடான டீக்கடை ஸ்டைல் பஜ்ஜி ரெடி. இது வட பாவ் மாதிரியும் இருக்கும்.