சண்டே ஸ்பெஷலாக வீட்டில் இருப்பவர்களுக்காக மசாலா போண்டா மொறு மொறுன்னு எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு கடலை எண்ணெய் பூண்டு இஞ்சி கடுகு பச்சை மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை உப்பு சீரக தூள் மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் மிளகு தூள் கரம் மசாலா கொத்தமல்லி இலை கடலை மாவு அரிசி மாவு ஓமம் சீரகம் பெருங்காயத்தூள் சமையல் சோடா
செய்முறை:
Advertisment
Advertisements
பச்சை பட்டாணி மற்றும் கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் பட்டாணி, கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கை வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை எடுத்து, பட்டாணி மற்றும் கொண்டைக்கடலையை மசிக்கவும்.
மசித்த உருளைக்கிழங்கை பட்டாணி கொண்டைக்கடலை கலவையுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, பூண்டு, இஞ்சி, கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
சீரக தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை சேர்த்து, மசாலா கலவையை மசித்த உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்க்கவும். கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், சீரகம், உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து மாவை கரைக்கவும். சமையல் சோடா மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து கலக்கவும். மசாலா கலவையை வட்டமாக தட்டி, மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூடான, மொறுமொறுப்பான மசாலா போண்டா ரெடி.