/indian-express-tamil/media/media_files/2025/04/17/ORGhFBDbwcq48C7gznUT.jpg)
சிறுநீரக பிரச்னையை போக்கும் 'டீ'... மலேசியாவில் ரொம்ப பேமஸ்; நம்ம ஊருல இந்த இலையில் போடலாம்: மருத்துவர் சிவராமன்
பாரம்பரிய மருத்துவத்தில் பூனை மீசை மூலிகைக்கென்றே பிரத்யேகமான இடம் உள்ளது. சிறுநீரகத்தின் தோழன் என்றே சொல்லலாம். இந்த செடி பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசை போலவே இருக்கும் என்பதால், இந்த பெயரிலேயே அழைக்கிறார்கள். சில சமயம், துளசி இலை போலவும் இருக்கும். அதனால், ஜாவா தேயிலை என்றும் சொல்கிறார்கள்.
பூனைமீசை:
பூனைமீசை செடி, சிறிய இலைகளைக் கொண்டவை, இவற்றின் மலர்கள் வெண்ணிறத்தில் நீண்டு சிறு இழைகளாகக் காணப்படுவது, பூனைகளின் முகத்தில் இருக்கும். பூனை மீசைக்கு ஒப்பாக இருப்பதால் இந்த செடியை பூனைமீசை செடி என்றழைக்கின்றனர். துளசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், பூனைமீசையை சீரக துளசி என்றும் அழைப்பர்.
கிராமங்களில் ஈரப்பாங்கான வயல் வெளிகளின் வரப்புகள், வாய்க்கால் கரைகள் போன்ற இடங்களில் தானே வளரும் சிறுசெடிதான் பூனைமீசை. இதன் கிளைகளை ஒடித்து வைப்பதாலும் விதைகள் மூலமும் வளரக் கூடிய இந்த அரிய மூலிகைச்செடி ஒன்று இருந்தாலே, அதன் மூலம் நிறைய செடிகளை உருவாக்கி விடலாம். இதன் மருத்துவ குணங்களுக்காக, இந்தச் செடிகளை நர்சரிகள் எனும் செடிகள் வளர்ப்பு மையத்தில், தொட்டிகளில் வளர்க்கும் வண்ணம் உற்பத்தி செய்து விற்கின்றனர்.
சிறுநீரக செயல்பாட்டை சீர்செய்யும்:
பூனைமீசை செடியின் சமூலம் எனும் அனைத்து பாகங்களையும் நிழலில் உலர வைத்து, நன்கு இடித்து தூளாக்கி வைத்துக் கொண்டு, அதில் சிறிதளவு எடுத்து ஒன்றரை தம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைத்து, நீர் கால் தம்ளர் எனும் அளவில் சுண்டியதும் ஆற வைத்து, தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரக பாதிப்புகள் மெல்ல சீராகும். நெடுநாள் சிறுநீரக பாதிப்புகளால், இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல், புண்கள், நீர்க்கட்டிகள் போன்றவற்றை போக்கும்.
செரிமானக் கோளாறுகள்:
இரத்தத்தில் கலந்த யூரியா உப்பை நீக்கி, சிறுநீரக பாதிப்பிற்காக எடுத்துக்கொண்ட மேலைமருந்துகளின் பக்க விளைவுகளான செரிமானக் கோளாறுகள், உடல் எரிச்சல் மற்றும் மலச் சிக்கல் உள்ளிட்டவற்றை போக்கும். மேலும், பித்தப்பை பாதிப்பால் உண்டான கல் மற்றும் கல்லீரல் கொழுப்பை கரைக்கும்.
ஜாவா டீ:
மலேசியாவில் ஜாவா டீ என்று அழைக்கப்படும் பூனைமீசை தேநீர். சிறுநீரகம், ரத்தத் தூய்மையில் முக்கியமான பங்குவகிக்கும் பூனைமீசை மூலிகையில், தேநீர் செய்து பருகுவர்.
தேநீர் தயாரிக்கும் முறை:
பூனைமீசையின் பசுமையான இலைகள் கிடைத்தால் நான்கைந்து இலைகளை நீரில் இட்டு, நன்கு கொதிக்க வைத்து, அதில் கருப்பட்டி எனும் பனைவெல்லம் (அ) பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால், உடலில் சேர்ந்த நச்சுக்கள் எல்லாம், இந்த மூலிகைத் தேநீரால் ஏற்படும் அதிக அளவிலான சிறுநீர் வெளியேற்றத்தில் கலந்து வெளியேறும்.
உடலுக்கு தீங்கு செய்யும், சிறுநீரக இயக்கத்தை பாதிக்கும், யூரியா உப்பு போன்ற கெட்டவற்றை உடலில் இருந்து வெளியேற்றி, சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது இந்த பூனைமீசை தேநீர். பசுமையான இலைகள் கிடைக்காதவர்கள், பூனைமீசை சூரணம் எனும் பொடியை சிறிதளவு நீரில் இட்டு மேற்சொன்ன முறையில் கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து, பருகி வரலாம்.
சிறுநீரக பாதிப்புகள் இல்லாதவர்களும், பூனைமீசை டீயைப் பருகிவரலாம், இரத்தம் சுத்திகரிப்பாகி, உடல் வளம் கூடும். உடலில் செரிமான ஆற்றலை மேம்படுத்தி, நச்சுக் கொழுப்புகளை நீக்கி, அதிக உடல் எடைக் குறைப்பில், முக்கிய மூலிகைத்தீர்வாக விளங்குகிறது, இந்த பூனைமீசை..!
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.