நவீன கால உணவுகளுடன் தவறாமல் இடம் பிடிக்கும் ஒரு 'டிஷ்' ஆக மயோனைஸ் இருந்து வருகிறது. இவை முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருளாகும். இவற்றை பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் மயோனைஸ் தயார் செய்யப்படுகிறது. பிரெஞ்சு உணவு வகையான மயோனைஸ் சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இளையதலைமுறையினர் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுகளின் பட்டியலில் மயனோசும் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தெலங்கானாவில் புட் பாய்சன் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்துள்ளது. குறிப்பாக, ஐதராபாத்தில் மோமோஸ் உணவை உட்கொண்டதால் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 15 பேர் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுனர்.
இது தொடர்பாக நடந்த ஆய்வில், இந்த உபாதைகளின் பின்னால் முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக தெலங்கானா உணவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
"பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின்படி, தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற உணவு சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த சில மாதங்களில் பல சம்பவங்களில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உணவு விஷமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெலுங்கானா உணவு பாதுகாப்பு ஆணையர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“