கோடை காலத்தில் இளநீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இளநீர் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியைக் கொடுக்கும். இளநீர் பால் ஜூஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வழுகல் தேங்காய், இளநீர் – தலா 100 கிராம்
திக்கான பால் – 200 கிராம்
நாட்டு சர்க்கரை – 4 டீஸ்பூன்
செய்முறை
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும். வழுகல் தேங்காயுடன் இளநீர், நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, பால் ஊற்றி மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து எடுத்து ‘ஜில்’லென்று பரிமாறவும். இப்போது சூப்பரான இளநீர் பால் ஜூஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“