நம்மில் பலருக்கு முள்ளங்கி பிடிக்காது. ஆனால் முள்ளங்கியில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இந்நிலையில் நாம் நன்றாக வளர்ந்த முள்ளங்கி அல்லது சிறிதான முள்ளங்கி இதில் எது நல்லது என்ற கேள்வி எழும். இந்நிலையில் முள்ளங்கியில் உள்ள குறைந்த கலோரிகள், நார்சத்து, வைட்டமின் சி இருக்கிறது.
நமது ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டிற்கும். காயங்கள் குணமடைவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்குவதற்கும் உதவுகிறது.
இந்நிலையில் ஆயுர்வேத முறைப்படி, வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை குணப்படுத்தும். குறிப்பாக இருமல், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் ஜீரணத்தை அதிகரிகும்.
ஆனால் இதுவே நன்றாக விளைந்த முள்ளங்கி, ஜீரணத்திற்கு சரியாக இருக்காது. ஆயுர்வேத முறைப்படி இது சூடு தன்மை கொண்டது. இந்நிலையில் முளங்கி வளர்ந்தால் அதில் இருக்கும் நார்சத்து அளவு அதிகரிக்கும்.
மேலும் வளர்ந்த முள்ளங்கி கபத்தை அதிகரித்து, குழந்தைகளில் உடல் வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆயுர்வேத அடிப்படையில் கூறப்படுகிறது.
இந்நிலையில் விளைந்த முள்ளங்கியைவிட, சிறிய முள்ளங்கிதான் சாப்பிடுவதற்கு சரியானது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதை அவித்து சாப்பிடுவதுதான் சிறந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil