சொல்லும் போதே எச்சில் ஊறும்... 90'ஸ் கிட் பேவரைட்; தேன் மிட்டாய் இப்படி செய்து பாருங்க!

ஒவ்வொரு 90'ஸ் கிட்ஸுக்கும் பிடித்தமான தேன் மிட்டாயை எவ்வாறு எளிதாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் செயல்முறை மிகவும் சுலபமாக இருக்கும்.

ஒவ்வொரு 90'ஸ் கிட்ஸுக்கும் பிடித்தமான தேன் மிட்டாயை எவ்வாறு எளிதாக செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் செயல்முறை மிகவும் சுலபமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Thaen Mittai

90'ஸ் கிட்ஸ்களால் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாத ஒரு உணவு இருக்குமென்றால் அது தேன் மிட்டாயாக தான் இருக்கும். அந்த அளவிற்கு எல்லோருக்கும் தேன் மிட்டாய் மிகவும் பிடிக்கும். அந்த தேன் மிட்டாயை எப்படி வீட்டில் சுலபமாக செய்யலாம் என்று இந்தியன் ரெசிபிஸ் தமிழ் யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

தேவையான பொருட்கள்:

மைதா,
பேக்கிங் பவுடர்,
பேக்கிங் சோடா,
தயிர்,
நெய்,
தண்ணீர்,
சர்க்கரை மற்றும்
எண்ணெய்

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு மைதா, கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர், கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா, இரண்டு டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர், ஒரு டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதன் பின்னர், இத்துடன் சிறிது சிறிதாக தண்ணீர் மற்றும் கொஞ்சமாக ஃபுட் கலர் சேர்த்து பிசைய வேண்டும்.

இந்த மாவை தனியாக வைத்து விடலாம். இனி அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு கப் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்க்க வேண்டும். சர்க்கரை, பாகு பதத்திற்கு வந்த பின்னர், ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்க்கலாம். 

இதையடுத்து, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இனி, மாவை தேன் மிட்டாய் வடிவத்திற்கு வெட்டி, அதில் போட்டு பொறிக்கலாம். இவற்றை பொறித்து எடுத்த பின்னர், சர்க்கரை பாகுவில் போட வேண்டும். இவ்வாறு 15 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்தால் சுவையான தேன் மிட்டாய் தயாராகி விடும்.

recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: