அமாவாசை என்றாலே பித்ரு வழிபாடு அவசியம் செய்ய வேண்டும் என்பது நியதி. இப்படி செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசி நமக்கும், நம் சந்ததியினருக்கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, அமாவாசை படையலில் இடம்பெற வேண்டிய காய்கறிகள் குறித்தும், பயன்படுத்தக் கூடாத காய்கறிகள் குறித்தும் அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
Advertisment
அமாவாசை படையலில் அசைவ உணவுகளை கூடுமானவரை தவிர்த்து விடுவது நல்லது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமாவாசை படையலில் வைத்த உணவை, காகம் போன்ற ஜீவராசிகளுக்கு கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தவிர அன்னதானமும் வழங்க வேண்டும்.
அமாவாசையன்று சந்திரனும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் சில உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.