/indian-express-tamil/media/media_files/2025/01/28/x0fC4hKEK88p3EN69C9U.jpg)
இந்த தை அமாவாசை தினத்தில், பொரியல், கூட்டு என தை அமாவாசை ரெசிபிகளை இப்படி ரெடி பண்ணி படையுங்கள். கோமதி கிச்சன்ஸ் யூடியூப் சேனலில் கூறியுள்ளதை அப்படியே இங்கேயே தருகிறோம்.
அமாவாசைகளில் சிறப்பு மிக்க தை அமாவாசை நாளில் படையல் இடுவதற்கு பொரியல் முதல் கூட்டு வரை தை அமாவாசை ரெசிபியை இப்படி ரெடி பண்ண முயற்சி செய்து பாருங்கள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது என்றாலும், ஆண்டில் 3 அமாவாசைகள் சிறப்புக்குரிய அமாவாசை நாட்களாகக் கருதி படையலிட்டு முன்னோர்களை வழிபடுகின்றனர். அமாவாசைகளில் ஆடி ஆமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் சிறப்புக்குரிய அமாவாசைகளாக வழிபடபப்டுகின்றன. இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி ஜனவரி 28-ம் தேதி வருகிறது. அதனால், இந்துக்கள் தை அமாவாசை நாளில் விரதம் இருந்து, பல சிறப்பு உணவுகளை சமைத்து, முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபடுவார்கள்.
அதனால், இந்த தை அமாவாசை தினத்தில், பொரியல், கூட்டு என தை அமாவாசை ரெசிபிகளை இப்படி ரெடி பண்ணி படையுங்கள். கோமதி கிச்சன்ஸ் யூடியூப் சேனலில் கூறியுள்ளதை அப்படியே இங்கேயே தருகிறோம்.
சாம்பார்
முதலில் முக்கால் கப் அளவுக்கு துவரம் பருப்பு எடுத்து, ரெண்டு தடவ நல்லா கழுவி, கொஞ்சமா மஞ்சள் தூள், கொஞ்சம் எண்ணெய், ரெண்டு கப் தண்ணி ஊத்தி பருப்பை ஒரு அஞ்சு நிமிஷம் ஊறவெச்சு இருங்க. இப்ப இத வேக வச்சுக்கலாம். இந்த தண்ணீரில் இருந்து கொஞ்சம் ரசத்துக்கு எடுத்துக்கலாம். இப்ப குக்கரை மூடிட்டு பிரஷர் வச்சு மிதமான தீயில் மூன்று விசில் விடுங்க நல்ல குழைவாகவே வெந்து வந்துரும்.
சம்டைம்ஸ் உங்களுக்கு பருப்பு வெக நேரமானால், வேற அடுப்புக்கு மாற்றிவிடுங்கள்.
அடுத்து, கால் கப் அளவுக்கு பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ரெண்டு தடவ கழுவி. இதுல வந்து சௌசௌ அதாவது சீம கத்தரிக்கா 150 கிராம் எடுத்து நல்லா தோலை எடுத்துட்டு கட் பண்ணது 1 1/2 கப் அளவுக்கு சேருங்கள். நல்லா பெரிய சைஸ் தக்காளி பாதி அளவு மட்டும் சேர்த்துக்கோங்க. கூடவே ஒரே ஒரு பச்சை மிளகாய் காரத்துக்கு வந்து நம்ம வரமிளகாய் அரைச்சு சேர்த்துக்கொள்ளுங்கள். மூடி பிரஷர் வச்சுட்டு மிதமான தீயில் இரண்டு விசில் விடுங்க. அந்த காய் குழையாது. பருப்பு நல்லா வெந்து வந்திருக்கும். இப்ப வந்து நம்ம சாம்பாருக்கு காய்கறி எல்லாம் வேக வச்சுக்கலாம்.
இன்னைக்கு சாம்பாருக்கு அதாவது சுரைக்காய் பூசணிக்காய் அப்புறம் அவரைக்காய். இதுல உங்களுக்கு வேணும்னா மத்த நாட்டு காய்கறிகள், அல்லது உங்களுக்கு என்ன கிடைக்குதோ அதை சேர்த்துக்கலாம். சாம்பார் பொடி சேர்த்து சாம்பார் செய்யுங்கள்.
இப்ப இந்த சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு 1 1/2 டீஸ்பூன் அளவுக்கு கல் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். காய்கள் வெந்ததுக்கு அப்புறமா இதுல வந்து மாங்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
பாதி பருப்பு வேக வைத்து, அந்த பருப்புல இருந்து முக்கால் பருப்பு வேகவைத்ததை எடுத்து, கொஞ்சமா உப்பு சேருங்க, இது பருப்புக்கு போதும். அதே மாதிரி ரசத்துக்கு கொஞ்சம் தண்ணி இருந்தா போதும். இப்ப இதுல வெதுவெதுப்பான தண்ணி தேவையான அளவு சேர்த்துக்கோங்க. பச்சை தண்ணி சேர்த்துர வேண்டாம் இப்ப இதுல வந்து புளித்தண்ணி சேர்த்துக்க போறோம். புளி தண்ணியோட அளவுன்னு பாத்தீங்கன்னா ஒரு அரை கப்புக்கு ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு சேர்த்துக்கொள்ளலாம்.
சாம்பாருக்கு தாளிப்பு ரெடி பண்ணிக்கலாம், அதுக்கு ஒரு தாளிக்கிற கரண்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து இருக்கிறேன். இதுல வந்து கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கோங்க. கடுகு பொரிய ஆரம்பிக்கிற சமயத்துல கொஞ்சமா சீரகம் சேர்த்து பொரிய விட்டுக்கலாம். கூடவே வந்து கட்டி பெருங்காயம் சேர்த்துக்கோங்க. ஒரு அஞ்சுல இருந்து ஆறு வெந்தயம் மட்டும் சேர்த்துக்கோங்க. அதிகமா வேண்டாம் எல்லாம் நல்லா பொரிஞ்சு சிவந்ததுக்கு அப்புறமா ஒரே ஒரு காய்ஞ்ச வரமிளகாய சிவக்க விட்டுவிட்டு, இப்ப இதுல வந்து கொஞ்சம் கருவேப்பிலை போட்டு பொறிய விட்டு சாம்பார்ல எடுத்து ஊத்திருங்க. சாம்பார்ல ஊத்தி கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்க. அந்த பெருங்காயம் வந்து கரையணும், இதுல வந்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காவை மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பா தண்ணி இல்லாம அரச்சிட்டு சேர்த்துவிடுங்கள்.
கடைசியாக ஒரு சின்ன பீஸ் வெல்லத்தை போட்டு சேர்த்துக்கோங்க. இது ஆப்ஷனல் தான். அதுக்கப்புறம் பொடியா நறுக்கின கருவேப்பிலை கொத்தமல்லி இலைகளை போட்டுட்டு அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. ரொம்ப ரொம்ப சூப்பரான கலந்தக்காய் சாம்பார் ரெடி ஆயிடுச்சு.
மோர் குழம்பு
இப்ப அடுத்தது வந்து மோர் குழம்பு செய்றதுக்கு, ஏற்கனவே பூசணிக்காய வேக வைத்துவிடுங்கள். பூசணிக்காய் ஒரு கப் அளவுக்கு இருக்கும். அதை வந்து கொஞ்சமா தண்ணீர், மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கணும். இப்ப இந்த மோர் குழம்புக்கு ஒரு கப் அளவுக்கு துருவிய தேங்காய், ஒரு டீஸ்பூன் பச்சரிசி, அரை டீஸ்பூன் துவரம்பருப்பு ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தாளிக்கிறதுக்கு கால் டீஸ்பூன் அளவுக்கு கடுகு கால் டீஸ்பூன் அளவுக்கு உடைச்ச உளுத்தம் பருப்பு சேர்த்துக்கோங்க. இது பொரிஞ்சிட்டு இருக்கும் கொஞ்சமா கட்டி பெருங்காயத்தை நுணுக்கி போட்டு பொரிய விடுங்கள். ஒரு சின்ன வரமிளகாயும் சேர்த்து நல்லா சிவந்து இந்த அளவுக்கு வந்ததுக்கு அப்புறமா வேகவைத்த காய் அதே மாதிரி கொஞ்சம் தாராளமா கருவேப்பிலை இலைகளை சேர்த்துக்கோங்க.
சேர்த்திட்டு இப்ப அரைச்சு விழுது இருக்கு பாத்தீங்களா, அந்த விழுதையும் இதுல சேர்த்துக்கலாம். ரொம்ப தண்ணி ஊத்தி அரைச்சிட கூடாது. ஒரு அரை கப் தண்ணி ஊத்தி இந்த மாதிரி அரைச்சுக்கோங்க இப்ப இத கொஞ்ச நேரம் எண்ணெயிலேயே அந்த கெட்டியாக மாறி வதக்கிக்கோங்க தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் அளவுக்கு கல் உப்பு சேர்த்து, டேபிள் சால்ட்னா கொஞ்சம் கம்மி பண்ணி ஓரளவு பார்த்தீங்கன்னா கெட்டியா அந்த அளவுக்கு வதங்கி வந்துரும் வந்ததுக்கு அப்புறமா ஒரு முக்கால் கப் அளவுக்கு தயிர மிக்ஸியில் அரைத்து இருக்கிறேன் ரொம்ப கெட்டியாவும் இருக்க கூடாது ரொம்ப தண்ணியாவும் இருக்க கூடாது இந்த கன்சிஸ்டன்சில இருக்கிறப்ப ஊத்திட்டு கலந்துக்கிட்டு இந்த மோர் ஊத்தி அந்த குழம்பு வந்து கொஞ்சம் சூடு ஏறனும். கொதிக்க கூடாது கலந்தத எடுத்துட்டீங்கன்னா அந்த மோர் வந்து திரிஞ்சு போயிடும் அதனால, கொஞ்ச நேரம் அந்த கலந்துகிட்டே இருங்க இப்ப பார்த்தீங்கன்னா மோர் குழம்பு ரெடி ஆயிடுச்சு.
கூட்டு
இப்ப அடுத்தது, கூட்டுக்கு பூசணிக்காயை வேகவைத்து நல்ல பிரஷர் ரிலீஸ் செய்து, அந்த காய் வந்து நல்லா குழைந்திருக்கும். ஆனா, வந்து பருப்பு நல்லா வெந்துருச்சு ரொம்ப மசிச்சிடாம கலந்து குடுங்க. இப்ப இத வந்து தாளிச்சு ஒன்னு சேர்த்து வைத்து விடலாம் அதுக்கு ஒரு சட்டியில ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கலாம் இதுல தாளிக்கிறதுக்கு அரை டீஸ்பூன் கடுகு, கொஞ்சமா கட்டி பெருங்காயம் சேர்த்துக்கோங்க. இப்ப போட்டிருக்கிற கடுகும் கட்டிப் பெருங்காயம் நல்ல பொரிஞ்சு வரட்டும் இந்த அளவுக்கு பொரிஞ்சதுக்கு அப்புறமா கொஞ்சம் கருவேப்பிலை இலைகளையும் வேகவச்ச அந்த பருப்பு காய் இரண்டையுமே சேர்த்துக்கோங்க. சேர்த்திட்டு இப்ப இதுல வந்து பாத்தீங்கன்னா அரை கப் துருவின தேங்கால நாலு காஞ்ச வரமிளகாய் ஒரு அரை டீஸ்பூன் சீரகம் போட்டு தண்ணி ஊத்தாம இந்த மாதிரி அரைச்சு வையுங்கள். அதை இதுல சேர்த்துக்கோங்க இப்ப இதை வந்து நம்ம கலந்து கொடுத்துடலாம். இந்த இதுக்கு தேவையான அளவு உப்பு நம்ம சேர்த்துக் கொள்வோம் உப்போட அளவு ஒரு டீஸ்பூன் கல்லு உப்பு, . டேபிள் சால்ட்னா முக்கால் டீஸ்பூன் சேர்த்துக்கோங்க இது நல்லா கலந்து கொதிச்சு வரட்டும் கொதிச்சு நல்லா கெட்டியாயிடுச்சு இந்த சமயத்துல அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க நம்மளோட கூட்டு ரெடி ஆயிடுச்சு.
அடுத்தது அவரைக்காய் பருப்பு போட்ட பொரியல் செய்ய போறோம். அதுக்கு ஒரு பான்ல ஒரு டீஸ்பூன் எண்ணெய்யில ஒரு அரை டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் அளவுக்கு உடைச்ச உளுத்தம் பருப்பு, இது ரெண்டும் நல்ல புரிஞ்ச செவக்க ஆரம்பிக்கிற சமயத்துல ஒரு ரெண்டு காஞ்ச வரமிளாகாய் காரத்துக்கு ஏத்த மாதிரி சேர்த்து அதையும் சிவக்க விட்டுருங்க. இப்ப பார்த்தீங்கன்னா ஓரளவு நல்லா சிவந்துடுச்சு, இன்னைக்கு ஒரு 150 கிராம் அளவுக்கு அவரைக்காய் கட் பண்ணினது ஒரு 1 3/4 கப் அளவுக்கு இருக்கும். அந்த அவரைக்காய் ஓட கொஞ்சம் கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து இருக்கிறேன். இந்த எண்ணெயில் தண்ணி ஊத்தாம இந்த அவரைக்காயை நல்லா வதக்கி விடுங்க இப்ப இந்த அவரைக்காய் பொரியலுக்கு பார்த்தீங்கன்னா ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு பாசிப்பருப்ப நல்லா கழுவிட்டு முக்கால் மணி நேரமா ஊற வைத்திருக்கிற அந்த பருப்புல இருந்து தண்ணிய வடிச்சிட்டு பருப்பை மட்டும் சேர்த்து இதோட கொஞ்ச நேரம் வதக்கிக்கலாம். இந்த பருப்பு வேக வைக்கிறதுனால உங்களுக்கு அந்த காய் வேகுறப்ப அந்த பருப்பு வெந்துடும். இப்ப இந்த பொரியலுக்கு தேவையான அளவு உப்பு ஒரு அரை டீஸ்பூன் அளவுக்கு கல் உப்பு சேர்த்து இருக்கிறேன் இந்த அளவுக்கு வதங்கினதுக்கு அப்புறமா இதுல தண்ணி சேர்த்துக்கோங்க. தண்ணி வந்து பாத்தீங்கன்னா ஒரு முக்கால் கப் அளவுக்கு மட்டும் சேர்த்து நல்லா கலந்துட்டு இத கொஞ்சம் மூடி வைத்து மிதமான தீயில் அந்த காய் வெந்து அந்த பருப்பு வேகணும். இடையில இடையில கலந்து குடுங்க பார்த்தீங்கன்னா நல்ல காரியம் வெந்துருச்சு. அந்த பருப்பு வெந்துருச்சு பாருங்க இந்த மாதிரி இருக்கிற சமயத்துல இதுல நம்ம குருவி நான் தேங்காய் சேர்த்துக்கலாம். அதோட அளவு பாத்தீங்கன்னா ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு துருவின தேங்காய் நீங்க பிரெஷ்ஷாவே சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு நல்ல ஒரு ரெண்டு மூணு நிமிஷத்துக்கு இந்த சட்டியில் வதக்கி விடுங்க இப்ப பார்த்தீங்கன்னா நல்லா வதங்கி இந்த அளவுக்கு வந்துருச்சு இப்ப அடுப்பை ஆஃப் பண்ணிடலாம் பொரியல் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.