இந்தாண்டு தைப்பூசத்திற்கு முருகனுக்கு பிடித்த நைவேத்தியம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தைப்பூசம் ஸ்பெஷல் நைவேத்தியம் தேனும் திணை மாவும் சேர்த்து எப்படி செய்வது என்று லாவண்யா’ஸ் குக்கிங் கார்னர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
திணை மாவு
தேன்
ஏலக்காய்
செய்முறை
முதலில் தேவையான அளவு திணை மாவு எடுத்து ஊற வைக்கவும். பின்னர் ஊற வைத்ததை எடுத்து தண்ணீர் நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு கடாயில் போட்டு தண்ணீர் போகும் வரை வறுக்கவும்.
பின்னர் அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.
முருகனுக்கு உகந்த பிரசாதம் | தேனும் தினைமாவும் | Foxtail milet with Honey | Temple |தைப்பூசம் 2025
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பு போட்டு வறுத்து அதனை எடுத்து திணை மாவில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் மேலே நெய் சிறிது விட்டு கலந்து உருண்டை பிடித்து சாப்பிடலாம். இல்லை என்றால் தூளாகவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். இதை எப்போதும் போல ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மாதிரியும் சாப்பிடலாம்.