நம்ம வீட்டுல எப்போதும் இருக்கும் இந்தக் காய்... ஒரு தடவை சமைத்து 3 வேளையும் ருசிக்கலாம்: செஃப் தீனா ரெசிபி
சுவையான தக்காளி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்று சமையற் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார். இதற்கான ரெசிபியை தனது யூடியூப் சேனலில் அவர் பதிவிட்டுள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சுவையான தக்காளி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்று சமையற் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார். இதற்கான ரெசிபியை தனது யூடியூப் சேனலில் அவர் பதிவிட்டுள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பெரும்பாலும் நம் எல்லோரது வீட்டிலும் நாள்தோறும் இருக்கும் காய்கறியில் ஒன்று தக்காளி. அந்த வகையில் இந்த தக்காளியை கொண்டு எவ்வாறு சுவையான குழம்பு செய்யலாம் என்ற ரெசிபியை செஃப் தீனா தெரிவித்துள்ளார். அதன் செய்முறையை இதில் காணலாம். இந்த தக்காளி குழம்பை காலை, மாலை என எப்போது வேண்டுமானலும் சாப்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - முக்கால் கிலோ, தக்காளி - 12, மஞ்சள் தூள் - அரை டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, குழம்பு தூள் - 3 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு, பூண்டு - 12, இஞ்சி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 7, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கடுகு, தேங்காய் மற்றும் எண்ணெய் - 200 மிலி
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், துருவிய தேங்காய், குழம்பு தூள் போட்டு நன்றாக கிளற வேண்டும். இவை அனைத்தையும் தனியாக ஆற வைக்க வேண்டும்.
இப்போது அதே கடாயில், தக்காளி, கல் உப்பு சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும். இதையடுத்து வதக்கி வைத்த அனைத்தையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு செய்து முடித்தால் தாளிக்கும் வேலை மட்டும் மீதமிருக்கும்.
இதற்காக, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது, அரைத்து வைத்த தக்காளி கலவையை இத்துடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இறுதியாக ஒரு கொதி விட்டு கறிவேப்பிலை தூவி எடுத்தால் தக்காளி குழம்பு தயாராகி விடும்.