வீட்டில் இருக்கும் தக்காளி வைத்து எப்படி சுவையான ஊறுகாய் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தக்காளி ஊறுகாயை பழைய சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தியிடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் தக்காளி வைத்து எப்படி சுவையான ஊறுகாய் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தக்காளி ஊறுகாயை பழைய சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தியிடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளை வீட்டிலேயே செய்துக்கொள்ள தான் அதிகமானோர் நினைப்பார்கள். அதற்கான காரணமாக இருப்பது ஆரோக்கியம் மட்டுமே.கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளைவிட வீட்டிலேயே இலகுவான முறையில் செய்யும் உணவிற்கு ஒரு சுவையும் அதிகம். அந்தவகையில் வீட்டில் இருக்கும் தக்காளி வைத்து எப்படி சுவையான ஊறுகாய் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தக்காளி ஊறுகாயை பழைய சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தியிடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவிடவும். தக்காளி மென்மையாக வெந்து ஓரளவிற்கு அதன் சாறு வற்றியவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி சமைக்கவும். இவற்றில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி ஓரளவிற்கு தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து கொள்ளவும்.
அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் கடுகு மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இவை ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும். பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து கொள்ளுங்கள். கடுகு பொரிந்ததும் பூண்டு, சிகப்பு காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு கலந்து அடுப்பை அணைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொள்ளவும். பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தய பொடியை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதில் செய்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு போட்டு கலந்துவிட்டு அடுப்பை ஆன் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும். அனைத்தும் நன்றாக வெந்து எண்ணெய் மிதந்துவரும் பொழுது அடுப்பை அணைத்தால் ருசியான தக்காளி ஊறுகாய் ரெடி..!