தஞ்சாவூரில் மட்டும் கிடைக்கும் தேங்காய் திரட்டு பால் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம். சுவையான தேங்காய் திரட்டு பால் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 கப்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
நெய்
முந்திரி பருப்பு
தேங்காய்
உலர் திராட்சை
செய்முறை
இரண்டு டீஸ்பூன் பாசி பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடியாக அரைக்கவும். ஒரு மிக்சி ஜாரில், இரண்டு கப் புதிதாக துருவிய தேங்காய் சேர்த்து, இரண்டு டீஸ்பூன் புதிதாக வறுத்த மற்றும் அரைத்த பாசி பருப்பு தூள், இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு கப் பொடித்த வெல்லம், ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி சேர்த்து வறுக்கவும். பிறகு சிறிது நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுக்கவும். பிறகு சிறிது உலர் திராட்சை சேர்த்து வறுக்கவும்.
தேங்காய் திரட்டுப்பால் | Thengai Therattipal Recipe in Tamil | Delicious Sweet Recipe
அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தனியாக வைக்கவும். அதே கடாயில் கால் கப் நெய் சேர்த்து அரைத்த தேங்காய் வெல்லம் கலவையை சேர்க்கவும். அதை நெய்யுடன் கலக்கவும். இதனை நெய்யில் வேக வைக்கவும்.
பின்னர் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள், உலர் திராட்சை மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் சுவையான தேங்காய்த் திராட்டி பால் ரெடி.