லஞ்ச் செய்ய குழப்பம் வேணாம்; ஈஸி டிப்ஸ் பாருங்க!

மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று குழப்பமாக இருக்கிறதா? இதோ உங்களுக்காக சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த தட்டை பயிர் சாதம் ரெசிபியை இந்த தொகுப்பில் காணலாம்.

மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று குழப்பமாக இருக்கிறதா? இதோ உங்களுக்காக சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த தட்டை பயிர் சாதம் ரெசிபியை இந்த தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-08 184353

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பயிறு வகைகளை குழம்பு வைத்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இதனை ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த பயிறு வகைகளும் வயிற்றுக்குள் சென்றுவிடும். அருமையான சுவையில் சத்தான தட்டைபயிறு சாதம் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காண்போம்.  

Advertisment

மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று குழப்பமாக இருக்கிறதா? இதோ உங்களுக்காக சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த தட்டை பயிர் சாதம் ரெசிபியை இந்த தொகுப்பில் காணலாம். உணவே மருந்து என்பது பெரியவர்கள் சொன்ன வேத வார்த்தை. எந்த நோயாக இருந்தாலும் அதனை நாமது உணவு பழக்கத்தின் மூலம் சரி செய்துவிடலாம் என பலர் கூறுகின்றனர். அதற்காக கையில் கிடைததை எல்லாம் சாப்பிடலாம் என்ற அர்த்தம் இல்லை. நமது பசி அறிந்து உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு காய்கறிகள், பழங்களை நமது உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால் நோய் அண்டாமல் வாழலாம்.

இப்போது புரதம் நிறைந்த, ஊட்டசத்து மிக்க  தட்டை பயிர் சாதம் குறித்து பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 2 மேஜை கரண்டி
கடலை பருப்பு- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 3
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - தேவையான அளவு
தட்டைபயிர் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1 1/2  தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 3 
தண்ணீர் - 3 கப்
பச்சரிசி - 1 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை: 

Advertisment
Advertisements

ஒரு குக்கரில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம், இடித்த பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவையில் ஊறவைத்த தட்டை பயிரை சேர்த்துவிட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள் சேர்த்து கலந்துவிட்டு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், தண்ணீரை ஊற்றி கலந்துவிட்டு ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். 

அதில் நெய், கொத்தமல்லி சேர்த்து மூடிவிட்டு இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு எடுத்து பார்த்தால் பிரமாதமான தட்டை பயிர் சாதம் ரெடியாக இருக்கும். இதனை சூடாக சாப்பிடும்போது சுவை மேலும் படுஜோராக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: