கடையில் கிடைக்கிற மாதிரி நல்லா மொறுமொறுப்பான, காரசாரமான தட்டை வீட்டிலேயே செய்ய விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கான டிப்ஸ்தான் இது. மிகவும் சுலபமாக கடைகளில் கிடைப்பது போல் வீட்டிலேயே செய்வது எப்படி என்று 5மினிட்ஸ்குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு கட்டிப் பெருங்காயம் பொட்டுக்கடலை பூண்டு மிளகு சீரகம் கறிவேப்பிலை அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் எள் எண்ணெய் நெய் அல்லது வெண்ணெய் தண்ணீர் பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை சின்ன கிண்ணம் அல்லது பாத்திர மூடி
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், கடலைப்பருப்பையும், கட்டிப் பெருங்காயத்தையும் தண்ணீரில் நன்கு ஊறவைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு, மிளகு, சீரகம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பவுலில் அரிசி மாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு, உப்பு, மிளகாய்த்தூள், எள் மற்றும் சூடுபடுத்திய எண்ணெயைச் சேர்க்கவும்.
இப்போது, ஊறவைத்த கடலைப்பருப்பு, பெருங்காயத் தண்ணீர், மற்றும் கொஞ்சமாக நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் சேர்த்த பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மாவை மென்மையாகப் பிசைந்து கொள்ளுங்கள். மாவை மிகவும் கெட்டியாகப் பிசைந்துவிடாதீர்கள், அப்படிச் செய்தால் தட்டை கல் போல ஆகிவிடும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவவும். தயார் செய்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளை உருட்டி, ஒரு சிறிய கிண்ணத்தைப் பயன்படுத்தி அழுத்தினால் அழகாக தட்டை தயாராகிவிடும்.
மற்றொரு முறையில் செய்ய விரும்பினால், சப்பாத்தி மாவு போல தேய்த்து, ஒரு பாத்திரத்தின் மூடியைப் பயன்படுத்தி அச்சுகள் எடுத்துக்கொள்ளலாம். இறுதியாக, இந்த தட்டைகளை எண்ணெயில் நன்கு பொரித்தெடுத்தால், மொறுமொறுப்பான, சுவையான தட்டை தயாராகிவிடும்.