புசு புசு தட்டு இட்லி... அரிசி கூட இந்த 2 பொருள் மிஸ் பண்ணாதீங்க!
நம்முடைய வீட்டில் தட்டு இட்லி எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். ஓட்டல் ஸ்டைலில் புசு புசு தட்டு தயார் செய்ய இங்கு சில முக்கிய குறிப்புகளை வழங்கி இருக்கிறோம்.
தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி மிகவு பிரபலான ஒன்றாக இருக்கிறது. இவை சிறந்த காலை உணவாகவும் அறியப்படுகிறது. இவற்றில் பொடி இட்லி, தட்டு இட்லி எனப் பல வகைகள் உண்டு.
Advertisment
அந்தவகையில், நம்முடைய வீட்டில் தட்டு இட்லி எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். ஓட்டல் ஸ்டைலில் புசு புசு தட்டு தயார் செய்ய இங்கு சில முக்கிய குறிப்புகளை வழங்கி இருக்கிறோம்.
தேவையான பொருள்:
இட்லி அரிசி - 3 கப் முழு உளுந்து - 1 கப் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் ஜவ்வரிசி - 1/2 கப் வெள்ளை அவல் - 1/2 கப்
Advertisment
Advertisement
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் இட்லி அரிசி, முழு உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். பிறகு அவற்றில் தண்ணீர் சேர்த்து நன்கு அலசிக் கொள்ளவும்.
இப்போது ஒரு மூடி எடுத்து அதனை அப்படியே மூடி வைத்து விடவும். இந்த 3 பொருளும் சுமார் 6 மணி நேரம் நன்கு ஊற வேண்டும்.
இதன்பின்னர், ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் ஜவ்வரிசி மற்றும் அவல் சேர்த்துக் கொள்ளவும். இவற்றையும் அரிசி, உளுந்துடன் சேர்த்து தண்ணீரில் அப்படியே ஊற வைக்கவும்.
பிறகு, இவற்றை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரைத்து எடுத்த மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இந்த மாவை ஒரு மூடி போட்டு மூடி சுமார் 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
இப்போது மாவு நன்றாக புளித்து வந்திருக்கும். அந்த மாவை தட்டு இட்லி ஊற்றும் பாத்திரத்தில் ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்தால் தட்டு இட்லி ரெடி. இவற்றை உங்களுக்கு பிடித்த சட்னி, சாம்பாருடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“