scorecardresearch

காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் நீர்… பெண்களுக்கு இது ஏன் முக்கியம்னு தெரிஞ்சுக்கோங்க!

காலையில் வெறும் வயிற்றில், நாம் எதையாவது சாப்பிடுவதற்கு பதில், தண்னீர் குடிப்பதுதான் சரியாக இருக்கும். ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரில் கால் பங்கை , காலை எழுந்தவுடன் குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் குளிர்ந்த நீரை குடிப்பதுதான் சரியாக இருக்கும்.

குளிர்ந்த நீரில் வாயுத்தொல்லை அதிகரிக்கும் தன்மை குறைவாக இருக்கும்.

வெந்தய நீரின் முக்கியத்துவத்தை நாம் அறிய வேண்டும். சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுபடுத்த வெந்தயம் உதவும். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும்.

இரவில் தண்ணீரில் வெந்தயத்தை ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் வெந்தய தண்ணீரையும் வெந்தயத்தையும் குடிக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி, அதன் சாறை தேனுடன் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிலாம். இது உடலில் உள்ள கொழுப்பு கரையும். நுரையீரலில் உள்ள நோய் குறையும்.

கஞ்சித் தண்ணீர், குடிப்பது நன்மை தரும். இதில் கார்போஹைட்ரேட் சத்தும் இருக்கிறது. கஞ்சித்  தண்ணீருடன் மோர் கலந்து குடிக்கலாம். இதில் நல்ல பாக்ட்டீரியாங்கள் உள்ளது.

வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பது நல்லது. அருகம் புல் சாறில் மருத்துவ தன்மைகள் நிறைந்தது. அருகம் புலில் நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து இலையின் ஓரங்களில் வெள்ளையான பொருள் இருக்கும். அதை நீக்க வேண்டும். அருகம் புல் சாறு, வெந்நீருடன் சேர்த்து குடிக்கலாம்.

இளநீர்,  நெல்லிக்காய் சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சாப்பிடலாம். முளைகட்டிய பயிர் வகைகளை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: The best thing to drink in empty stomach