டீயுடன் ரஸ்க் சாப்பிடும் நபரா நீங்கள். அதுவும் அதை ஆழமாக டீயில் முக்கி, கரைவதற்குள் சாப்பிடும் நபராக இருந்தால் . இந்த தகவல் உங்களுக்குத்தான்.
நீங்கள் நினைப்பது போல் வெறும் ஸ்நாக்ஸ் அல்ல ரஸ்க், டீயுடன் சேர்த்துதானே சாப்பிடுகிறோம் அதனால் என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் நினப்பது வெளியே கேட்கிறது. சற்று உட்கார்ந்து யோசித்தால் ரஸ்க் உள்ள ரிக்ஸ் தெரியும்.
ரஸ்க் மைதாவால் ஆனது. கூடுதலாக செயற்கையான இனிப்பு சேர்க்கப்படுகிறது. ரஸ்க் செய்ய பயன்படுத்தும் மைதா மிக மலிவானதாக இருக்கலாம், சுத்தமில்லாத எண்ணெய், சர்க்கரை மற்றும் செயற்கையான கெமிக்கல்ஸ் இருக்கிறது.

இதை சாப்பிட்டால், ரத்தத்தில் சுகர் அதிகரிக்கும். கூடுதலாக குடலில் இருக்கும் கெட்ட பேக்டிரியாவை அதிகரிக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கலாம். கூடுதலாக மன அழுத்தம் ஏற்படலாம். நீங்கள் உடல் எடை குறைக்க சர்க்கரையை எடுத்துகொள்ளாமல் இருப்பீர்கள். ஆனால் மாலையில் 3 ரஸ்க் சாப்பிட்டால் போதும், அளவுக்கு அதிகமான சர்க்கரையை எடுத்துகொண்டதாகதான் இருக்கும்.
இதனால் ரக்ஸை சாப்பிடாமல் சுண்டல் அல்லது நட்ஸ் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும்.