ராமர் பற்றி பேசியது எங்கள் மனதை புண்படுத்துகிறது இதனால் இதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல். ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல் செய்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ நாகை மாலி, ராமாயணம் ஒரு கற்பனை கதை என்றும் இதை இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சேது சமுத்திர திட்டத்திற்கு நாஙகள் முழு ஆதரவு அளிக்கிறோம். இதனால் நாகை மாவட்டம் வேகமாக வளர்ச்சியடையும் என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன். இந்த தீர்மானத்தை ஏற்றுகொள்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று சொல்வதை தவிர்த்து. ராமர் பற்றி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் பேசிய விதம் எங்கள் மனதை புண்படுத்துகிறது.
100 கோடி பேர் பின்பற்றும் இந்து மதத்தின் நாயகர் ராமன். கடவுள் ராமரை எப்படி கதாபாத்திரம் என்று சொல்ல முடியும்? . ராமர் பற்றி பேசிதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மீனவர்களிடம் ஆய்வு நடத்திய பின்பு இத்திட்டத்தை நிறைவேற்றுங்கள். மக்கள் ஆதரவு கொடுத்தால் எந்த திட்டத்திற்கும் நாங்கள் எதிராக இருக்க மாட்டோம் என்று கூறினார்.
இதற்கு பதில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் “ இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிய போதே, முழு ஆய்வு செய்யபட்டது. அதனால் ஆய்வு தொடர்பாக நீங்கள் கவலை பட வேண்டாம் என்று தெரிவித்தார்.