கார்த்திகை தீபத்திற்கு ஸ்பெஷலாக தெரளி இலை கொழுக்கட்டை. உடலுக்கு நல்லதும் கூட. விசேஷ தினங்களில் சட்டென்று சீக்கிரம் செய்யலாம்.
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் தெரளி இலை கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
பாசிபருப்பு
தேங்காய் துருவல்
ஏலக்காய்
சுக்கு
வெல்லம்
செய்முறை
பச்சரிசி எடுத்து அதை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். தண்ணியை நன்கு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சிறிதும் அதில் இருக்கக் கூடாது.
வெல்ல் கரைசலையும் எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மிதமான தீயில் பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், ஊறவைத்த அரிசியை அரைத்து அதையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் தெரளி இலை கொழுக்கட்டை | karthigai deepam special kolukattai | kolukattai
ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய், சுக்கு இரண்டையும் நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள மாவு பருப்பு மற்றும் வெல்ல கரைசலை சேர்த்து பிசைந்து தெரளி இலையில் கட்டி இட்லி சட்டியில் வைத்து வேக வைத்து எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“