20 ஆண்டுகளுக்கு முன் பால் சாப்பிடுவது நல்ல பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று மருத்து ஆய்வுகளில் பால் அவசியம் இல்லாத உணவு, தேவையில்லாத உணவு என்று கருத்துகள் வருகின்றன.
அதனால் பலரும், தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பால் குடிக்கலாமா, வேண்டாமா என குழப்பம் அடைந்துள்ளனர். அந்த வகையில் சித்த மருத்துவர் சிவராமன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
மனிதன் மட்டும் தான் தாய் பால் தவிர மற்ற விலங்கின் பாலை குடிக்கிறார்கள். பால் பொருட்களில் மிகவும் சிறந்த உணவாக மோர் மட்டுமே உள்ளது. மற்ற பால் வகைகள் தேவை இல்லாதது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுவே இயற்கைக்கு மாறாக உள்ளது. பால் கொடுக்கும் மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் பல ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அதை நாம் சாப்பிடும் போது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதனால் பிரச்சனைகள் வருகிறது. குழந்தைகள் பொதுவாக 2-3 வயதில் இருக்க கூடியவர்கள் அடிக்கடி சளி, காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்கள், ஒவ்வாமை வருவது வழக்கமாக உள்ளது.
இதற்கு பெரும்பாலும் பால் தான் காரணம். இருப்பினும் அதில் உள்ள வே ப்ரோட்டீன் நல்லது செய்யக் கூடியது. அதே நேரம் உடல் பருமனாக உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து பால், பால் பவுடர் கொடுப்பது அவர்களின் உடல் எடையை மேலும் கூட்டும்.
இந்த உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது Dr.Sivaraman speech about heart attack
எனவே மருத்துவர் அறிவுரைபடி குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். கால்சியம் சத்து குறைவாக உள்ளது, மாதவிடாய் முடிவில் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அறிவுரைபடி மருந்தாக பால் குடிக்க சொன்னால் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.