தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். உடலில் உஷ்ணத்தை சீராக பராமரிப்பதில் உணவுகள் முக்கிய இடம் வகிக்கின்றன. அதன் அடிப்படையில் சில வகையான உணவுகளை இந்தக் கோடை காலத்தில் சாப்பிடக் கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர் எட்வினா ராஜ் பரிந்துரைத்துள்ளார். அவற்றை தற்போது காணலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 3 foods to avoid in hot weather; nutritionist shares better alternatives
அதிக உப்பு நிறைந்த உணவுகள்: பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை வெயில் காலத்தில் சாப்பிடக் கூடாது. இவை உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்து விடும். மேலும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு இவை வழிவகுக்கும். இது போன்ற உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்று எட்வினா ராஜ் கூறுகிறார்.
அதிக அளவிலான சாப்பாடுகளை தவிர்க்க வேண்டும்: கோடை காலம் முடியும் வரை அதிகமான அளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, எண்ணெய்யில் அதிகம் பொறிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை செரிமான கோளாறுகள் ஏற்பட காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்: அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட செயற்கை பானங்கள் புத்துணர்ச்சி அளிப்பதை போன்று தோன்றினாலும், இவை கூடுதல் ஆபத்தை விளைவிக்கும். இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை இவை வேகமாக உயர்த்தும். மேலும், சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு இது வழிவகுக்கும்.
சாப்பிடக் கூடிய உணவுகள்:
பழங்கள் மற்றும் காய்கறிகள்: வெள்ளரிகள், தர்பூசணி, ஆரஞ்சு மற்றும் கீரைகள் போன்றவற்றை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். இவை நீர்ச்சத்து முதல் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றன.
இதேபோல், பழைய சாதம், மோர், யோகர்ட் மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திகள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக, புரதச் சத்து நிறைந்த பொருட்களும், தானியங்களும் நம் உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.