பேரீச்சை, திராட்சை, எள்ளு... ரத்த சிவப்பு அணு அதிகரிக்க இப்படி சாப்பிடுங்க!
உடலில் ஹீமோகுளோபின் (ரத்த அளவு) குறைவாக உள்ளது என மருத்துவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். குறிப்பாக பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும். இதற்கு ஆரோக்கியமான முறையில் எளிய முறையில் தீர்வு உள்ளது.
உடலில் ஹீமோகுளோபின் (ரத்த அளவு) குறைவாக உள்ளது என மருத்துவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். குறிப்பாக பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும். இதற்கு ஆரோக்கியமான முறையில் எளிய முறையில் தீர்வு உள்ளது.
ஆரோக்கியமான உணவு பழக்கம் நல்ல உடல் நலத்தை மேம்படுத்தும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அந்தவகையில் ரத்த சோகையைத் தடுக்க, உடலில் ரத்த அளவை (ஹீமோகுளோபின்) சீராக வைத்துக் கொள்வது அவசியம். இந்தியாவில் பலருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. இது பொதுவானதாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா கூறுகிறார். இதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என்றும் கூறுகிறார்.
Advertisment
ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பு அணுக்களில் இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். இது உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.
ஆண்களுக்கு, 13.5 முதல் 17.5 கிராம் டெசிலிட்டர் வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் டெசிலிட்டர் வரை இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் உங்கள் உணவை மாற்றியமைத்து இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சேர்த்துக்கொள்வது அவசியம்.
பேரீச்சம்பழம்
Advertisment
Advertisements
பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது எரித்ரோசைட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து (Fe) உள்ளது, இது உடலுக்கு தேவையான சத்துகளை கொண்டுள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். எனவே, பேரீச்சம்பழங்களை உட்கொள்வது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், ரத்த சோகையைத் தடுக்கவும் உதவும்.
திராட்சையில் வளமான இரும்பு மற்றும் காப்பர் சத்து உள்ளது. இவை ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்கவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும்.
தினை
தினை வகைகளை தினமும் உள்கொள்வது இரும்புச்சத்தை மேம்படுத்தி, ரத்த சோகையை குறைத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
எள்
எள் வகைளில் இரும்பு, ஃபோலேட், ஃபிளாவனாய்டுகள், காப்பர் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளள. இவை ரத்த சோகையைத் தடுத்து இரும்புச்சத்தை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என நிபுணர் லவ்னீத் கூறுகிறார்.
மேலும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேறு சில உணவுகளும் உதவுகின்றன. அவை ஜாமூன், உலர் ஆப்ரிகாட், ராகி, பருப்பு மற்றும் நிலக்கடலை போன்றவைகளும் உதவியாக உள்ளன எனக் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“