உங்களுக்கு அடிக்கடி மூட்டி வலி மற்றும் வாதத்தினால் ஏற்படும் வலியை கூட, இந்த மூன்று பழங்களை சாப்பிடுவதால் நாம் கட்டுப்படுத்த முடியும்.
ஆப்பிள்: இதில் அதிக சத்துகள் உள்ளது. க்யூயர்சிட்டன் என்ற பிளப்பானாய்ட்ஸ் இருக்கிறது. இது வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கொண்டது. க்யூயர்சிட்டன், உடலில் உள்ள விக்கத்தை குறைக்க உதவுகிறது. வாதத்தால் வரும் இன்னல்களை குறைக்க உதவுகிறது.
அன்னாசிப்பழத்தில், புரோமெல்லயின் என்ற என்சைம் இருக்கிறது. இந்த சத்தைப் பற்றி செய்த ஆய்வில்,வீக்கத்திற்கு எதிராக தன்மை கொண்டிருக்கிறது. புரோமெல்லயின் என்ற என்சைம், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் பொருள் உற்பத்தியாவதை தடுக்கிறது. இதனால் முட்டியில் வீக்கம் மற்றும் வலி குறையும்.
ஆரஞ்சு: இதில் வைட்டமின் சி-அதிகம் உள்ளது. இது சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்த வைட்டமின் சி வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் நமது செல்கள் சேதமடையாமல் பார்த்துக்கொள்கிறது.இந்நிலையில் முட்டி வலிக்கு வைட்டமின் சி குறைவு கூட காரணமாக இருக்கலாம். இதனால் ஆரஞ்சு சாறு அல்லது அப்படியே ஆரஞ்சுகளை சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“