மாம்பழத்தில் அல்போன்சா , லன்கட, தேஷரி என்று பல வகைகள் இருக்கிறது. இந்நிலையில் பல வகை இருந்தாலும் கெமிக்கலை வைத்து பழுக்கவைக்காத மாம்பழத்தை எப்படி கண்டறிவது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும்.
மாம்பழத்தில் வெறும் இனிப்பு சுவை மட்டும் இல்லை, இதில் நார்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இந்நிலையில் செயற்கையான மாம்பழங்களை சாப்பிட்டால், உடல் நலக் கோளாறு ஏற்படும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், வெளியிட்ட தகவலில், பாதுகாப்பான முறையில் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் சாப்பிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக கால்சியம் கார்பைட் என்பதை வைத்துதான் மாம்பழங்கள் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின், விற்பனை விதிகள் 2011 படி, கால்சியம் கார்பைட் பயன்படுத்துவது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கால்சியம் கார்பைட் மாம்பழங்களை பழுக்கவைக்கும் போது, அசிட்டிலின் வாயு மாம்பழங்கள் மீது செலுத்தப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுத்தும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் கூறுகிறது.

இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களை எப்படி கண்டறிவது ?
மாம்பழத்தின் மணம், அதிகமாக இருக்க வேண்டும் .அதில் ஒரு இனிப்பு சுவை இருக்க வேண்டும். மேலும் பச்சை மட்டும் மஞ்சளான நிறம் கலந்து இருக்க வேண்டும்.
ஒரு பக்கெட் தண்ணீரில் மாம்பழங்களை சேர்க்க வேண்டும். மாம்பழங்கள் தண்ணீரில் மூழ்கினால் அது இயற்கையான முறையில் கனிந்துள்ளது என்று அர்த்தம். ஆனால் இதுவே மாம்பழங்கள் மிதந்தால் அது செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்று அர்த்தம்.
இதுபோல மாம்பழங்களை, பாதியாக வெட்டினால், மாம்பழத்தின் தோலுக்கு அருகில் இருக்கும் சதைப் பகுதியின் நிறமும், உள்பகுதியில் இருக்கும் நிறமும் வேறாக இருந்தால் அது செயற்கையான முறையில் பழுக்கவைக்கப்பட்டது. இதுவே ஒரே மாதிரியாக இருந்தால், அது இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“