New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/05/rm4Q6Hs0oydtspeeGo3q.jpg)
ஒரு நாளைக்கு, ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்று கூறுவார்கள். ஆப்பிளில் இருக்கும் ஊட்டச்சத்துகளின் காரணத்தினால் தான் இவ்வாறு கூறப்பட்டது. அந்த அளவிற்கு வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட்ஸ் ஆகியவை ஆப்பிளில் நிறைந்து இருக்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: This is what happens to the body if you eat an apple a day, like the saying goes
ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் திலீப் குடே, ஆப்பிளின் நன்மைகளை எடுத்துரைத்தார்.
"ஆப்பிள்கள், ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாக விளங்குகின்றன. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வைட்டமின் சி இருக்கிறது. மேலும், இவை கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவி செய்கிறது. இதன் நார்ச்சத்து செரிமான மண்டலம் சீராக இயங்க உதவி செய்கிறது" என மருத்துவர் திலிப் தெரிவித்துள்ளார்.
ஆப்பிளில் குர்செடின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் சில வகை புற்றுநோயின் அபாயத்தை குறைக்கின்றன என்று கூறப்படுகிறது. இதேபோல், இதன் நார்ச்சத்து உடல் எடையை பராமரிக்கவும், சர்க்கரை அளவை சீராக்கவும் பயன்படுகிறது.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த ஆப்பிளை, நம் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி சாலட் அல்லது ஓட்ஸ் உடன் சேர்த்து உண்ணலாம்.
ஆப்பிளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவை இயற்கையான முறையில் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் விளைய வைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஆப்பிளை சாப்பிடுவதற்கு முன்பாக அதனை நன்றாக கழுவ வேண்டும். இவை அதன் மீது இருக்கும் மெழுகு போன்றவற்றை நீக்க உதவும். ஆப்பிள்கள் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்க ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.