வாய்ப் புண், வயிற்றுப் புண்ணுக்கு இந்தக் கீரை ரொம்ப பெஸ்ட், வாரத்திற்கு 2 நாள் இப்படி சாம்பார் வைத்து சாப்பிட்டு பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இந்த கீரையை எபப்டி சாம்பார் செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆரும். வாரத்திற்கு 2 நாள் இந்த மணத்தக்காளி கீரையை சாம்பார் செய்து சாப்பிடலாம். மணத்தக்காளி கீரை சாம்பார் செய்வதற்கு, ஒரு வானலியை எடுத்து ஸ்டவ்வில் வைத்து பற்ற வையுங்கள். எண்ணெய் சூடானதும், அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போடுங்கள். வெங்காயம் வதங்கியதும், அதனுடன் 5 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். பூண்டு வதங்கியதும், அதனுடன் 2 பழுத்த தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். தக்காளி வதங்கியதும், சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு போடுங்கள். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி விடுங்கள். இதனுடன், 3 டேபிள்ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள்.
மசாலாப் பொருட்களுடைய பச்சை வாசனை போன பிறகு, 1 கப் அளவு துவரம் பருப்பை வேக வைத்து நன்றாக மசித்து சேருங்கள். நன்றாகக் கிளறிவிடுங்கள். இப்போது சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு கொதி வந்ததும், சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துள்ள மணத்தக்காளி கீரையை சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள். மணத்தக்காளி கீரை வேக வேண்டும் என்பதால் 10 நிமிடம் மூடி போட்டு வேக வையுங்கள்.
மணத்தக்காளி கீரை வெந்ததும், இதை தாளிக்க வேண்டும். ஒரு கடாயை எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சோம்பு சேர்த்து நன்றாகப் பொரியவிட்டு, இதனுடன் 2 வர மிளகாய் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன், பொடியாக நறுக்கி வைத்திருக்கிற சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயம் போடுங்கள். நன்றாக வதங்கிய பிறகு, அதை சாம்பார் உடன் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி கீரை சாம்பார் தயார். உங்கள் வீட்டில் இந்த மணத் தக்காளி கீரை சாம்பார் செய்து பாருங்கள்.