scorecardresearch

வெறும் 109 கலோரிகள்தான் : உடம்ப குறைக்கணும்னு நினைக்குறவங்க இந்த ரெசிபிய மிஸ் பண்ணாதீங்க

இந்நிலையில் மிகவும் குறைந்த கலோரிகள் கொண்ட இந்த ரெசிபியை நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள்.

வெறும் 109 கலோரிகள்தான்
வெறும் 109 கலோரிகள்தான்

இந்நிலையில் உடல் எடையை குறைப்பதற்கு நாம் அதிகம் மெனக்கெடுவோம். இந்நிலையில் மிகவும் குறைந்த கலோரிகள் கொண்ட இந்த ரெசிபியை நீங்கள்  ஒரு முறை செய்து பாருங்கள்.

இதில் ப்ரோபயாட்டிக்ஸ், கால்சியம், ஆண்டி ஆக்ஸிடண்ட், புரத சத்து உள்ளது. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். மேலும் விரைவில் ஜீரணமாகும். இந்த தயிர் பச்சடியில் அதிக கால்சியம், புரத சத்து, மினரல்ஸ், வைட்டமின்ஸ் இருக்கிறது.

இது இதய ஆரோக்கியம், ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவுகிறது. ஆண்டி ஆக்ஸிடண்ட்,  வைட்டமின் சி மற்றும் பொட்டாஷியம் இதில் இருக்கிறது. நைட்ரேட் இருக்கிறது.

தேவையான பொருட்கள்

½ கப்- குறைந்த கொழுப்பு கொண்ட தயிர்

2 டேபிள் ஸ்பூன் – பீட்ரூட் துருவியது

2 டேபிள் ஸ்பூன் – வெள்ளரிக்காய் துருவியது

3 பாதாம் ஊற வைத்தது

மாதுளைப் பழம்

கொத்தமல்லி

பச்சை மிளகாய்

சீரகப் பொடி

உப்பு

செய்முறை: இந்நிலையில் ஒரு பாத்திரத்தில்  தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் பீட்ரூட், வெள்ளரிக்காய், பாதாம், மாதுளை ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். தொடர்ந்து பச்சை மிளகாய், சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.  

இதில் புரத சத்து – 7.5 கிராம், கொழுப்பு சத்து- 4.1 கிராம் , நார்சத்து – 1 கிராம் உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: This recipe has only 109 calories making it perfect for those trying to lose weight