உலகம் வேகமாக நவீனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, உணவு பழக்கத்தில், உணவில் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளையும் கைவிட்டுவிட்டார்கள். 2000-க்கு பிறகு, பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு பலரும் பாரம்பரிய உணவுகளைத் தேடி சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரிசிதான் பிரதான உணவும், இந்தியா முழுக்க 300 வகையான நெல் வகைகள் இருந்ததாகக் கூறுகிறார்கள். இதில் தமிழ்நாட்டில் மக்கள் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப அரிசியை உணவாக சாப்பிட்டார்கள் என்று டாக்டர் நித்யா தனது சத்குரு சாய் கிரியேஷன்ஸ் யூடிடியூப் சேனலில் கூறியுள்ளார்.
திருமணமான ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து உணவாகக் கொடுப்பார்கள், பெண்களுக்கு, பிரசவத்திற்குப் பிறகு, பூங்கார் என்ற அரிசியை உணவாகக் கொடுப்பார்கள். உடல் மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு காட்டு யானம் என்ற அரிசியைக் உணவாகக் கொடுப்பார்கள். இது குழந்தைகளுக்கு உடல் வலிமையைக் கொடுக்கும். கருப்புக் கவுனி அரிசியை சாப்பிட்டால், எலும்புத் தேய்மானம் சரியாகும், கிட்னி நன்றாக இருக்கும், சர்க்கரை நோயாளிகளும் இந்த கருப்பு கவுனி அரிசியை சமைத்து சாப்பிடலாம் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
மேலும், வட இந்தியாவில் இருக்கக்கூடிய லைச்சா என்கிற அரிசி புற்றுநோய் செல்களை அழிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுவதாக டாக்டர் நித்யா கூறுகிறார்.
குறிப்பாக இந்த கருப்பு கவுனி அரிசியை சர்க்கரை நோயாலிகளும் எடுத்துக்கொள்ளலாம், கிட்னிக்கு பாதுகாப்பானது என்று டாக்டர் நித்யா கூறுகிறார். நம்முடைய பாரம்பரிய அரிசிகளில் எவ்வளவு நன்மை இருக்கிறது பாருங்கள்.