பப்பாளி, பாதாம், தர்பூசணி... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மை பாருங்க!

உங்கள் நாளை பப்பாளியுடன் தொடங்குவது உடலில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், சீரான குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

உங்கள் நாளை பப்பாளியுடன் தொடங்குவது உடலில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், சீரான குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Three Foods you should eat on an empty stomach in tamil

தர்பூசணி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது எலக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்கிறது.

காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது, ஏனெனில் நாம் காலையில் முதலில் நம் அமைப்பில் ஊட்டப்படும் ஊட்டச்சத்துக்கள், வரவிருக்கும் நாளுக்கான ஆற்றல் அளவுகள், இன்சுலின் அளவுகள், வளர்சிதை மாற்றம் மற்றும் நல்வாழ்வுக்கான பிற காரணிகளை பாதிக்கின்றன.

Advertisment

ஒருபுறம், காலை உணவுக்கு சரியான உணவுகளை உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். தவறான அளவுகளில் தவறானவற்றை உண்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அழிவை ஏற்படுத்தும். காபி மற்றும் வெண்ணெய் மற்றும் முட்டைகளுடன் கூடிய ஜாம் டோஸ்ட் போன்ற உணவுகள் மிகவும் உன்னதமான காலை உணவு சேர்க்கைகள் என்றாலும், வெறும் வயிற்றில் அனுபவிக்க வேண்டிய சில சூப்பர்ஃபுட்கள் உள்ளன. அப்படி உணவு நிபுணர்கள் கூறும் 3 முக்கிய உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பப்பாளி

உங்கள் நாளை பப்பாளியுடன் தொடங்குவது உடலில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், சீரான குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாகவும், ஆற்றலுக்குத் தேவையான பிரக்டோஸை வழங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இது ஆண்டு முழுவதும் கிடைப்பதால், பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு சூப்பர்ஃபுட் ஆகும். பப்பாளி சாப்பிடுவதற்கும் காலை உணவுக்கும் இடையே குறைந்தபட்சம் 45 நிமிட இடைவெளியை கடைபிடிக்கவும். இந்த பழம் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், பல்வேறு இதய நோய்களைத் தடுக்கவும், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கவும் உதவி செய்யும். எனவே உங்கள் நாளை பப்பாளியுடன் ஆரம்பிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஊறவைத்த பாதாம்

ஜிம்மிற்குச் செல்வதையோ அல்லது எந்த வகையான உடற்பயிற்சியையோ செய்வதையோ விரும்புபவர்கள், உடற்பயிற்சிக்கு முன் ஊறவைத்த மற்றும் தோல் நீக்கிய பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் அல்லது ஸ்மூத்திகள் போன்ற உலர் பழங்களைச் சாப்பிட வேண்டும்

பருப்புகளில் உள்ள புரதம் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரம் ஆகும். பல ஆரோக்கிய நன்மைகளுக்காக ஊறவைத்த பாதாம் மற்றும் ஊறவைத்த அத்திப்பழங்களை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம். மேலும் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாக சியா விதைகளை ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

தர்பூசணி

தர்பூசணி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது எலக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்கிறது. பழத்தில் 90% நீர் உள்ளது. இது காலையில் குறிப்பாக கோடையில் தண்ணீர் உட்கொள்ளும் சிறந்த தேர்வாக அமைகிறது. இது இயற்கையான சர்க்கரை மற்றும் குறைந்த கலோரிகளின் மூலமாகவும் உள்ளதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

இதில் உள்ள அதிக அளவு லைகோபீன் இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் பி6 மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநிலையை அதிகரிக்க உதவும். உங்கள் நாளை தொடங்க சிறந்த உணவு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: