நமக்கு சர்ககரை நோய் ஏற்பட்டால், பதற்றமடையாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு சரியான வாழ்வியல் மாற்றம் இந்த குறைபாட்டை அப்படியே சரி படுத்திவிடலாம். அதில் முதலில் நாம் எடுத்துகொள்ளும் உணவை சரி செய்துகொள்ள வேண்டும்.
முழுதானியங்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்வை நமக்கு தரும். இந்நிலையில் இந்த மூன்று முழு தானியங்களை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.
ராகி : கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய் குறைய உதவும். அடிக்கடி இதில் இட்லி, சப்பாத்தி, தோசை என்று செய்து சாப்பிடலாம்,

கம்பு: இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருக்கிறது. நார்சத்து இருப்பதால் மச்சிக்கலை குணபடுத்துகிறது, உடல் பருமன் குறையவும் உதவுகிறது. மேலும் இதில் இரும்பு சத்து உள்ளது.
பார்லி : இதில் இருக்கும் முக்கிய சத்தான பீட்டா குளுகன் (beta-glucan) ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.