குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டி கொடுக்க ரொம்ப ஈஸியான இந்த தேங்காய் பால் சாதம் செய்து கொடுங்கள். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி
தேங்காய் பால்
உப்பு
எண்ணெய்
நெய்
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு
கடுகு
கருவேப்ப்பிலை, கொத்தமல்லி தழை
பெருங்காயத்தூள்
இஞ்சி
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்
துருவிய தேங்காய்
தேவையான அளவு அரிசியை எடுத்து நன்கு கழுவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு குக்கரில் அரிசியை சேர்த்து அதில் இரண்டு கப் அளவிற்கு தேங்காய் பால் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து விட்டு மூன்று விசில் விட்டு இறக்கவும்.
சாதம் வெந்து உதிரியாக இருக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய், வர மிளகாய் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் பெருங்காயத்தூள் கலந்து விடவும். அடுப்பை ஆஃப் செய்துவிட்டு துருவிய தேங்காயை சேர்த்து கலந்து விடவும்.
இதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லித்தழை நெய் சேர்த்து கிளறி பரிமாறலாம். இதனுடன் முட்டை தொக்கு,தக்காளி தொக்கு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“