பிரியாணி சுவையில் வெரைட்டி சாதம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி
புளி
தேங்காய்
பச்சை மிளகாய்
உப்பு
மஞ்சள் தூள்
கரம் மசாலா
மிளகாய் தூள்
கடுகு
சோம்பு
பட்டை,கிராம்பு
ஏலக்காய்
கருவேப்பிலை,கொத்தமல்லி தழை
இஞ்சி
பூண்டு
முந்திரி,நிலக்கடலை
கடலை பருப்புஉளுத்தம் பருப்பு
வெங்காயம்
முதலில் தேவையான அளவு அரிசியை நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில்
மசாலா அரைப்பதற்காக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் ஒரு டீஸ்பூன் கடுகு, சோம்பு, ஊறவைத்த புளி, பூண்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் மைய பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக தண்ணீர் சேர்க்கக்கூடாது புளி ஊறவைத்த தண்ணீரே போதுமானது. பின்னர் ஒரு சூடான குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, நிலக்கடலை, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை அனைத்தும் வருபட்டு சிவந்ததும் இதில் நறுக்கிய ஒரு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமாக மாறியதும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி விடவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா விழுதை சேர்க்கவும். பச்சை வாசம் நீங்கும் வரை நன்கு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் தண்ணீரை வடிய விட்டு அரிசியை மட்டும் முதலில் சேர்த்து மசாலாவுடன் கலந்து விடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி விடவும். விசில் அடங்கியதும் கொத்தமல்லி தழைகளை தூவி தயிர் பச்சட், முட்டை கிரேவியுடன் சேர்த்து சாப்பிடலாம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“