கலவை சாதம் என்று சொல்லப்படும் வெரைட்டி ரைஸ்களில் முக்கியமானது தக்காளி சாதம். அதிகமாக தக்காளி சேர்த்து அதை பக்குவமாக வதக்கி பேஸ்ட் செய்து சுடு சாதத்துடன் கலந்து செய்யும் ஒரு சுவையான உணவு தான் இந்த தக்காளி சாதம்.
பள்ளி குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் மதிய உணவிற்கு இந்த தக்காளி சாதம் மிகப் பொருத்தமாக இருக்கும். நல்ல சுவையான தக்காளி சாதம் எப்படி தயார் செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி
கிராம்பு, பட்டை,ஏலக்காய்
அன்னாசி பூ, சீரகம்,
வெங்காயம்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
சீரகத் தூள்
கரம் மசாலா
இஞ்சி பூண்டு பேஸ்ட்உப்பு
பச்சை பட்டாணி
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் காரத்திற்கு தகுந்தார் போல பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி அதில் கருவேப்பிலை சிறிது சேர்க்கவும்.
பச்சை பட்டாணியை அதில் சேர்க்கவும். நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை அனைத்தையும் நன்கு வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் சிறிது தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதையும் இதில் சேர்த்து வதக்கவும்.
இதில் சிறிது வெள்ளம் சேர்த்து வதக்கி கரம் மசாலா சேர்த்து வதக்கி கொத்தமல்லி தழை தூவி சுடு சாதத்தை அதில் போட்டு கிளறி எடுத்தால் தக்காளி சாதம் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“