தேவையான பொருட்கள்
கொத்தமல்லி தழை
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
எண்ணெய் கடுகு கருவேப்பிலை
நெய்
முந்திரி
பெரிய வெங்காயம்
சீரகம்
பெருங்காயத்தூள்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து அதில் சிறிது கருவேப்பிலை, பெருங்காயத்தூள், நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை மிதமான சூட்டில் வேகவைக்கவும். அதில் உள்ள தண்ணீர் வற்றியதும் வேகவைத்து வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும். அதில் சுவைக்கு முந்திரிப்பருப்பு சேர்க்கலாம்,
இதில் முந்திரிபருப்பு, நிலக்கடலை, நெய் விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“